இந்தியா, மார்ச் 25 -- பிரதீப் ரங்கநாதனின் அடுத்தப்படம் குறித்தான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

'கோமாளி' திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தன்னுடைய அடுத்தப்படமான 'லவ் டுடே' படத்தில் இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தோன்றினார்.

மேலும் படிக்க | 'நான் லவ் பண்ணுன பொண்ணுக்கு இருந்த பெஸ்டி.. கால் செய்தால் என்கேஜிடாகவே இருக்கும்': பிரதீப் ரங்கநாதன் பேட்டி

இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றிப்பெற்றது. இந்த நிலையில்தான் 'ஓ மை கடவுளே' படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவுடன் 'டிராகன்' படத்தில் கை கோர்த்தார். கடந்த மாதம் வெளியான இந்தப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் படிக்க | Dragon M...