இந்தியா, பிப்ரவரி 14 -- Pradeep Ranganathan: அரியர் வெச்சா மாஸ் இல்ல; படிச்சா தான் மாஸ் என்று டிராகன் படத்தின் மையக்கருவை அப்படத்தின் கதாநாயகன் பிரதீப் ரங்கநாதன் பகிர்ந்து இருக்கிறார்.

டிராகன் படத்தின் முன் வெளியீட்டு விழாவில் சென்னையிபேசிய நடிகர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், '' ஃப்ரெண்டுன்னு மட்டும் நம்ப முடியுமா. படம் வேறு பிசினஸ் வேற. ஆனால், பார்த்தால் ஓ மை கடவுளேன்னு ஒரு பிளாக்பஸ்டர் ஃபிலிம் கொடுத்திருக்கார். சரி இவ்வளவு ஹிட்டுக்கொடுத்த டைரக்டர்னா கண்டிப்பா நல்லாதானே படம் இருக்கும்.

அப்படின்னு சொல்லிட்டு நம்பிக்கையோட பண்ண படம் தான், டிராகன். இந்த டிராகன் படத்தில் வந்து நான் அவ்வளவா பண்ணலைங்க. அவர் என்ன எழுதியிருக்காரோ, எனக்கு என்ன சொல்லிக் கொடுத்தாரோ, அதைத் தான் பண்ணுனேன். உண்மையான டிராகன் வந்து அவர் தான். அதனால் நன்றி அஸ்வத் ப்ரோ....