இந்தியா, பிப்ரவரி 18 -- Pradeep Ranganathan: கோமளி படத்தின் மூலம் இயக்குனராக பிரபலமான பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்து மேலும் பிரபலமானார். இப்போது பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக டிராகன் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 21ம் தேதி வெளியாகிறது.

இந்தப் படம் தமிழில் மட்டும் அல்லாது தெலுங்கிலும் வெளியாகிறது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ரிட்டன் ஆஃப் தி டிராகன் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வரன் மற்று கயாடு லோஹர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

படம் தெலுங்கிலும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தச் சூழலில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 16) ட்ராகன் படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில், பிரதீப் ரங்கநாதன் தெலுங்கில் பேசியதுடன், சில சுவாரஸ்யமான கருத்துகளையும்...