இந்தியா, பிப்ரவரி 17 -- Prabhas on Salaar: ஜியோ ஹாட் ஸ்டாரில் பிரபாஸின் ' சலார் ' திரைப்படம் ஒரு வருடமாக ட்ரெண்டிங்கில் இருப்பது தொடர்பாக ஜியோ ஹாட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது.

அந்த அறிக்கையில், ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தின் திரைப்படமான 'சலார் சீஸ்ஃபயர் - பார்ட் 1'ஜியோ ஹாட்ஸ்டாரில் (இதற்கு முன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்) 366 நாட்களுக்கும் மேலாக ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து புதிய சாதனையை படைத்து இருக்கிறது.' என்று குறிப்பிட்டு இருக்கிறது.

இயக்குநர் பிரசாத் நீல் இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில் பிரபாஸ், பிரித்விராஜ் சுகுமாறன், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப்படத்திற்கு இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்து இருந்தார்.

ஒரு வருடமாக ஓடிடி ட்ரெண்டிங்கில் சலார் படம் இருப்பதை கொண்டாடும் விதமாக ஹோம்பாலே நி...