ஹைதராபாத்,சென்னை, மார்ச் 28 -- பாகுபலி நடிகர் பிரபாஸின் திருமண வதந்திகள் மீண்டும் தலைதூக்கியுள்ளன. இது இணையம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பிரபாஸ், ஹைதராபாத்தைச் சேர்ந்த செல்வந்தரான தொழிலதிபரின் மகளை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. அது தொடர்பான தகவல்கள் ஊடகங்களில் சூடாக வெளியான நிலையில், பிரபாஸின் குழுவினர் இந்த விஷயத்தில் தெளிவுபடுத்த முன்வந்தனர்.

மேலும் படிக்க | Rashmika Mandanna: 'காய்ச்சலோடு வருவார்.. தூக்கம் இல்லாமல் போவார்' ராஷ்மிகாவை புகழ்ந்த சல்மான்!

பிரபாஸ் இந்த விஷயம் குறித்து அமைதியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு அவரது திருமணம் குறித்த அறிக்கைகள் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்று அவரது குழுவினர் இந்தியா டுடே டிஜிட்டலிடம் தெரிவித்துள்ளனர். 'வெளிவரும் அனைத்தும் போலி செய்திகள்' என்று அவர...