இந்தியா, பிப்ரவரி 10 -- உப்பில்லா உணவு குப்பையிலே என தமிழில் ஒரு பழமொழி உள்ளது. அதன் படி ஒரு உணவை உப்பு இல்லாமல் நம்மால் சாப்பிட முடியாது. உப்பு இல்லையென்றால் அந்த உணவின் உண்மையான சுவை தெரியாது. ஆனால் நாம் தற்போது அளவுக்கு அதிகமான உப்பை உட்கொள்கிறோம். இது பலவிதமான ஆபத்தை ஏற்படுத்தலாம்.

சோடியம் உடலுக்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும், ஆனால் அதை அதிகமாக உட்கொள்வது இதய நோய், பக்கவாதம் மற்றும் அகால மரணம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும் . நாம் பயன்படுத்தும் உப்பில் (சோடியம் குளோரைடு) சோடியம் அதிகமாக உள்ளது. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி, அதிகரித்து வரும் உப்பு நுகர்வு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.9 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது ஏயத் தெரியவந்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் ஒரு நாளைக்கு 2,000 மில்லிகிராம...