இந்தியா, பிப்ரவரி 1 -- * உதிரியாக வடித்த சூடான சாதம் - ஒரு கப்

* நல்லெண்ணெய் - ஒரு குழிக்கரண்டி

* கடுகு - கால் ஸ்பூன்

* வெந்தயம் - கால் ஸ்பூன்

* கறிவேப்பிலை - ஒரு கொத்து

* சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)

* பூண்டு - ஒரு கைப்பிடியளவு (பொடியாக நறுக்கியது)

* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)

* புளிக்கரைசல் - கால் கப்

* உப்பு - தேவையான அளவு

* மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

* குழம்பு மிளகாய்த் தூள் - ஒரு ஸ்பூன்

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து அது சூடானவுடன், அதில் கடுகு, வெந்தயம் சேர்த்து பொரிந்தவுடன் கறிவேப்பிலையை, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம், பூண்டு என அனைத்தையும் சேர்த்து நன்றாக எண்ணெயிலே வதக்கிக்கொள்ளவேண்டும்.

அடுத்து தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். உப்பு, மஞ்சள் தூள், குழம்பு மிளகாய்த் தூள் சேர...