இந்தியா, பிப்ரவரி 4 -- Pooja Hegde: த்ரி விக்ரம் இயக்கத்தில் அல்லு அர்ஜூன்- பூஜா ஹெக்டே நடித்த படம் அல வைகுந்த புரமலோ. இந்த தெலுங்கு படம் வெளியாகும் முன்னே புட்ட பொம்மா பாடலின் டீசர் வெளியாகி அனைவரையும் குஷியாக்கியது. இந்தப் பாடலில் வித்தியாசமான ஸ்டெப்களை போட்டு ஜானி மாஸ்டர் அனைவரையும் பாடலை பார்க்கத் தூண்டி இருப்பார்.

இந்த ஒரு பாடல் தெலுங்கு தாண்டி, மற்ற மொழி ரசிகர்களையும் இந்தப் படத்தின் மீது கவனம் ஈர்த்தது. பூஜா ஹெக்டேவை பலரும் புட்ட பொம்மா என்றே அழைக்கத் தொடங்கினர். இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அல வைகுந்த புரமுலோ படம் தமிழ் படம் என்று கூறியதால் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகிறார்கள். அல்லு அர்ஜுன் நடித்த இந்த சூப்பர் ஹிட் படத்தைப் பற்றி அவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்...