இந்தியா, ஏப்ரல் 12 -- அமைச்சர் பொன்முடியின் பெண்களை இழிவுபடுத்தும் பேச்சுக்கு எதிராக அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்ப் பண்பாட்டில் பெண்களுக்கு அளிக்கப்படும் மாண்பையும், மகத்துவத்தையும் அளவிட முடியாதவை என்பதை உணர்ந்து, பெண்களை அறிவின் உருவாகவும், ஆற்றலின் வடிவமாகவும், தாய்மையின் இலக்கணமாகவும் போற்றி வருகிறது தமிழ் சமூகம். ஆனால், விடியா திமுக அரசின் வனத்துறை அமைச்சர் பொன்முடி, சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில், சைவ மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் மிகவும் கீழ்த்தரமாகவும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இவரது பேச்சு, மனித மனதில் இருக்கக் கூடாத வக்கிரத்தின் உச்சத்தை வெளிப்படுத்தி...