இந்தியா, மார்ச் 30 -- Ponkaliamman: நமது இந்தியாவைப் பொறுத்தவரை பெண் கடவுள்களுக்கு பஞ்சமே கிடையாது. வட இந்திய பகுதிகளில் காளி மற்றும் துர்க்கை அம்மனுக்கு வழிபாடுகள் செய்யப்பட்டு பெரிய திருவிழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. நமது தமிழ்நாட்டில் திரும்பும் திசை எல்லாம் பெண் தெய்வங்களுக்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மிகப்பெரிய கோயில்கள் பல கடவுள்களுக்கு அமைக்கப்பட்டிருந்தாலும் தெரு முனைகள் தொடங்கி காடு வரை பெண் தெய்வங்களுக்கு கோயில்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்று எத்தனையோ பெண் தெய்வங்களுக்கு மிகப்பெரிய கோயில்கள் கட்டப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த கோவில்களில் ஒன்றுதான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவகிரி தலையநல்லூர் அருள்மிகு பொன் காளியம்மன் திர...