இந்தியா, ஜனவரி 27 -- வறுத்த வேர்க்கடலை - ஒரு கப்

பூண்டு - தோலுடன் 10 பல்

புளி - சிறிய அளவு

கறிவேப்பிலை - 2 கொத்து

பாதாம் - 5

மிளகு - 6

மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

(உங்கள் கார அளவுக்கு ஏற்ப சரிசெய்துகொள்ளலாம்)

உப்பு - தேவையான அளவு

ஒரு மிக்ஸி ஜாரில் வறுத்த வேர்க்கடலை சேர்த்துக்கொள்ளவேண்டும். அதில் தோலுடனே பூண்டு, சிறிது புளி, கறிவேப்பிலை, பாதாம், மிளகு மற்றும் மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து பொடித்துக்கொள்ளவேண்டும். பொடி மிகவும் மையாகவோ அல்லது மிகவும் கொரகொரப்பாகவோ இருக்கக்கூடாது. மீடியம் பதத்தில் இருக்கவேண்டும்.

அதில் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். இதை இட்லி அல்லது தோசைக்கு சூப்பர் சுவையானதாக இருக்கும். சாதத்தில் சேர்த்து சாப்பிடும்போது நெய் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மேலும் ஒரு ரெசிபியை தெரிந்துகொள்ளுங்கள் ...