இந்தியா, பிப்ரவரி 9 -- தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை பாதுகாப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மிகவும் இன்றியமையாத் தேவை என்பதை அறிந்தும் அந்தக் கடமையைச் செய்ய திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும். இந்நிலையில் சமூக நீதிப் போரில் அடுத்து என்ன என்பது குறித்து சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும் என பாமக தலைவர் அன்பு மணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,

"தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால், தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதைப் போலத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை பாதுகாப்பதற்கு சாதிவாரி ம...