இந்தியா, ஏப்ரல் 14 -- ராமதாஸ்க்கு எதிராக பேசிய பாமக பொருளாளர் திலகபாமா கட்சியை விட்டு வெளியேற வேண்டும் என பாமக பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாட்டாளி மக்கள் கட்சியின் அண்மை நிகழ்வுகள் பற்றிக் கட்சியின் பொருளாளராக இருக்கும் திருவாட்டி.திலகபாமா என்பார் கூறுகையில், பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் எல்லா நிலைகளிலும் சரியான முடிவெடுத்துச் சரியான செயல்பாடுகளுக்கு வழிகாட்டுவார். இப்போது தவறான முடிவெடுத்து இருக்கிறார். இது ஒரு ஜனநாயகப் படுகொலை என்று சிறிதும் பொருளற்ற முறையில் சிறுபிள்ளைத் தனமாக அய்யா அவர்கள் மீது குற்றம் சாட்டியிருக்கிறார்.

திலகபாமா கட்சிக்கு நேற்று வந்தவர். பா.ம.க.வின் கொள்கை கோட்பாடுகள் பற்றி அவருக்கு ஒன்றும் தெரியாது. கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக கட்ச...