இந்தியா, பிப்ரவரி 7 -- ஓடும் ரயிலில் கருவுற்றிருந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை, மணப்பாறையில் மாணவிக்கு பாலியல் சீண்டல் அதிர்ச்சியளிக்கிறது; தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், கோவையில் இருந்து திருப்பதி சென்ற விரைவுத் தொடர்வண்டியில் பயணம் செய்த கருவுற்ற பெண்ணுக்கு மனித மிருகம் ஒன்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதை அந்தப் பெண் கண்டித்ததால் ஆத்திரமடைந்த அந்த மிருகம், அப்பெண்ணை வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே ஓடும் தொடர்வண்டியிலிருந்து தள்ளி விட்டு கொலை செய்ய முயன்றதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சி அளிக்கின்றன.

அதேபோல், திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வக...