இந்தியா, பிப்ரவரி 4 -- பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியுமான சௌமியா அன்புமணி மாவட்டம் தோறும் கட்சி கொடியேற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது மருத்துவர் ராமதாஸ்க்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனராக மருத்துவர் ராமதாஸும், அக்கட்சியின் தலைவராக அவரது மகன் அன்புமணி ராமதாஸும் இருந்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தருமபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டதன் மூலம் சௌமியா அன்புமணி நேரடியாக அரசியல் களத்தில் குதித்தார். திமுக வெட்பாளர் மணியிடம் சிறு வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அவர் வெற்றி வாய்ப்பை இழந்து இருந்தார்.

அத்தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைக்க ராமதாஸும், பாஜக உடன் கூட்டணி வைக்க அன்புமணியும் ஆர்வம் காட்டியதாக ஊடகங்களில் தகவ...