இந்தியா, பிப்ரவரி 24 -- முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடன் பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பை நான் பெற்றிருந்தது எனது கௌரவம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதிமுக சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள், அன்னதானங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா உடன் பழகிய நாட்களை நினைவுகூர்ந்து பிரதமர் நரேந்திர மோடி தனது சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஜெயலலிதா அவர்களின் பிறந்தநாளில் அவரை நினைவுகூர்கிறேன். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், கருணைமிக்க தலைவராகவும், திறமை...