இந்தியா, பிப்ரவரி 25 -- குஜராத் மாநிலத்திற்கு இன்று (பிப்.25) பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற துவாரகாதீஷர் கோயிலுக்கு வழிபாடு செய்வதற்காக சென்றார். அவரை வரவேற்ற கோயில் பூசாரிகள் பிரதமருக்கு கிருஷ்ணர் சிலை பரிசாக அளித்தனர். பின்னர் துவாரகாதீஷர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.

பகவான் கிருஷ்ணர் பூலோகத்தில் இருந்து புறப்பட்டபோது அவர் ஆட்சி செய்த துவாரகா மாநகரம் கடலுக்கு அடியில் மூழ்கடிக்கப்பட்டதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் கோமதி நதி மற்றும் அரபிக்கடலின் முனையில் அமைந்துள்ளது துவாரகாதீஷர் கோயில். துவாரகாதீஷ் அல்லது துவாரகையின் அரசர் என்று அழைக்கப்படும் கடவுள் கிருஷ்ணர் கோயிலின் பிரதான தெய்வம்.

இந்த நிலையில், புராணங்களில் கிருஷ்ணரின் துவாரகா நகரம் மூழ்கிய இடமாக கருதப்படும் இடத்தில் ஆழ்கடல் பயணம் மே...