இந்தியா, ஜனவரி 31 -- Budget 2025 session: கடந்த 10 ஆண்டுகளில் வெளிநாட்டு சக்திகளின் தூண்டுதல்கள் ஏதுமின்றி நடைபெறும் முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடர் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று குடியரசுத் தலைவர் உரை உடன் தொடங்குகிறது. நாளைய தினம் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு "வெளிநாட்டுத் தலையீடு இல்லாத முதல் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இது" என்று கூறினார்.

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள அரசாங்கம் "ஒட்டுமொத்த வளர்ச்சி" என்பதில் அரசு கவனம் செலுத்தும் என்று வலியுறுத்திய பிரதமர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் புத்தாக்கம் (Inn...