இந்தியா, பிப்ரவரி 2 -- இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள முருகன் கோயிலின் மகா கும்பாபிஷேகத்தில், பாரதப் பிரதமர் மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது முருகனுக்கு அரோகரா எனக் கூறி பிரதமர் மோடி உரையைத் தொடங்கினார்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் கட்டப்பட்ட முருகன் கோயிலின் குடமுழுக்கு இன்று (பிப்ரவரி 2ஆம் தேதி) நடைபெற்றது.

அதில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதில், இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையேயான கலாசார மற்றும் ஆன்மிக உறவுகளை எடுத்துரைத்தார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீசனாதன தர்ம ஆலயம் என்கிற முருகன் ஆலய மகாகும்பாபிஷேகத்தில் மெய்நிகர் முறையில் உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் இந்தோனேஷியா இடையிலான புவியியல் தூரம் இருந்தபோதிலும...