இந்தியா, ஜனவரி 21 -- ப்ரோ கபடி லீக் 2024 தொடர் ஹைதராபாத்திலுள்ள கச்சபவுலி இண்டோர் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 80வது போட்டியில் தபாங் டெல்லி - யு மும்பா அணிகள் மோதின. குஜராத்துக்கு எதிரான முந்தைய போட்டியில் தோல்வி தழுவிய தபாங் டெல்லி இன்றைய ஆட்டத்தில் கம்பேக் தரும் விதமாக விளையாடியது.

ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் சமமான புள்ளிகளை பெற்றிருந்தபோதிலும், இரண்டாம் பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணி முன்னேறியது. இதன் விளைவாக முழு ஆட்ட நேர முடிவில் 39-33 என்ற புள்ளிக்கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது தபாங் டெல்லி.

முதல் பாதி, இரண்டாம் பாதி என இரண்டிலும் ரெயிட், டேக்கிள் புள்ளிகளில் தபாங் டெல்லி முன்னிலை பெற்றது. இதற்கு நேர் மாறாக யு மும்பா அணி முதல் பாதி, இரண்டாம் பாதி என ரெயிட், டேக்கிள் ...