இந்தியா, ஜனவரி 3 -- புரோ கபடி லீக் 2023 தொடர் தற்போது நொய்டாவில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொடரின் 54வது போட்டி ஹரியானா ஸ்டீலர்ஸ் - ஜெயப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. ஹரியானா அணி ஜெய்ப்பூரை விட அதிக வெற்றிகள் பெற்றிருந்தாலும் குறைவான புள்ளிகளை பெற்றிருந்ததால் புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.

இதையடுத்து இன்றைய போட்டியில் ஜெய்ப்பூர் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் முழு ஆட்ட நேர முடிவில் 45-34 என்ற புள்ளி கணக்கில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் 23 ரெயிட், 8 டேக்கிள், 2 ஆல்அவுட், 2 எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்றது. சூப்பர் ரெயிட் புள்ளிகள் எதுவும் பெற்வில்லை.

ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி 18 ரெயிட், 13 டேக்கிள், 2 ஆல்அவுட், ஒரு எக்ஸ்ட்ரா புள்ளிகளை பெற்ற...