இந்தியா, ஜனவரி 28 -- பெண்களின் உடலில் மாதம் தோறும் நிகழும் ஒரு மாற்றம் தான் மாதவிடாய் சுழற்சி. இந்த நாட்களில் பெண்கள் அதிக உடல் சோர்வுடனும், மிகுந்த உணர்ச்சி மிகுந்தும் காணப்படுவார்கள். இந்த நேரங்களில் பெண்கள் ஓய்வு எடுக்க வேண்டும். மேலும் இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நாட்களாகும். இந்த சமயத்தில் உண்டாகும் தாங்க முடியாத மாதவிடாய் வலியைக் கட்டுப்படுத்த முதலில் வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்ளலாம் . அது மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட மாத்திரைகளாக இருக்க வேண்டும். ஆனால் வலி நிவாரணிகளை தொடர்ந்து பயன்படுத்துவதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும். இதனிடையே அன்னாச்சிப்பழம் சாப்பிட்டால் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அன்னாச்சிப்பழத்தில் உள்ள ப்ரோமெலைன் என்ற என்சைம், அழ...