இந்தியா, செப்டம்பர் 24 -- மதுரை மாவட்டத்தில் உள்ள மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணன். இவர் ஆர்.எஸ்.எஸ்- இல் பிரமுகராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் கிருஷ்ணன் வீட்டிற்கு முன்பு வேகமாக வந்த நபர் ஒருவர் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளார். இதன் காரணமாக அவரது வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. பின்னர் பெட்ரோல் குண்டு வீசிய நபர் அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்த நபருடன் ஏறித் தப்பிச் சென்றுள்ளார்.

ஈரோடு, கோயம்புத்தூர் மாவட்டத்தைத் தொடர்ந்து தற்போது மதுரையிலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. இதுகுறித்து காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதா...