இந்தியா, பிப்ரவரி 16 -- நாம் நமது வீடுகளில் நறுமணத்தை தக்க வைக்க பத்திகள், ரூமி ஸ்ப்ரே போன்றவற்றை பயன்படுத்துகிறோம். அது போன்ற ஒரு பொருள் தான் வாசனை மெழுகுவர்த்திகள். வீட்டில் நறுமணம் தரும் வேலையை செய்கின்றன. மேலும் ஒளியையும் தருகிறது. இத்தகைய வாசனை மெழுகுவர்த்திகளை பெரிய ஹோட்டல்களில் இருப்பதைக் காணலாம். இதனை பலரும் தங்களது வீடுகளிலும் வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால் இந்த வாசனை மெழுகுவர்த்திகள் நமது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதாக சமீபத்திய ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

நம்மில் பலருக்குப் பிடித்தமான வாசனை மெழுகுவர்த்திகள் உள்ளன, அவற்றை நீண்ட, சோர்வான நாளுக்குப் பிறகு ஒவ்வொரு மாலையும் ஏற்றி அமைதியான இடத்தை உருவாக்குகிறோம். ஆனால் இந்த மெழுகுவர்த்திகள், புலன்களுக்கு இதமளிக்கும் அதே வேளையில், உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்குமா என்று நீங்கள் ...