இந்தியா, டிசம்பர் 30 -- கம்பு -100 கிராம்

பாசிப்பருப்பு - ஒரு கப்

அரிசி - ஒரு கப்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகு - 10

பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - 1

எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகிய மூன்றையும் 4 மணி நேரம் ஒன்றாக ஊற வைக்க வேண்டும்.

பின்னர் கிரைண்டர் அல்லது மிக்ஸியில் இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்திற்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.

அதில் உப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தையும் போட்டு, தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்த்து எடுத்த வேண்டும்.

இந்த தோசைக்கு எந்த சட்னி வகைகள், சாம்பார், கிரேவிகள் என அனைத்தும் சூப்பர் மேட்சாக பொருந்தும்.

100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போ...