இந்தியா, பிப்ரவரி 19 -- தமிழர்கள் உணவுகளோடு சேர்த்து சிற்றுண்டிகளையும் அதிகமாக சாப்பிடுகின்றனர். தமிழர்களின் சிற்றுண்டிகள் பல சத்துக்களை கொடுக்க கூடிய பலன்களை கொண்ட உணவாக இருக்கிறது. அத்தகைய சிற்றுண்டிகளில் ஒன்றான வேர்க்கடலை மாலை நேரங்களிலும் வெளியே செல்லும்போதும் நாம் சாப்பிடுவது வழக்கம். ஆனால் இந்த வேர்க்கடலையை வைத்து சுவையான வேர்கடலை சாதம் செய்யலாம். அது உங்களுக்கு தெரியுமா? ஆமாம், மதிய உணவிற்கு மற்றும் காலை உணவிற்கும் இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். வேர்க்கடலையில் உள்ள பல சத்துக்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் பல நன்மைகளை வழங்குகிறது. எனவே இந்த வேர்க்கடலை வைத்து சாதம் செய்து சாப்பிடும் போது அதன் சத்துக்கள் நேரடியாக நமக்கு கிடைக்கிறது. வேர்கடலை பொடியை செய்து வைத்துக் கொண்டால் நாம் விரும்பும் போது வேர்கடலை சாதத்தை கிளற...