இந்தியா, பிப்ரவரி 19 -- PC Sreeram: இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான செழியன் பிசி ஸ்ரீராமுடன் பணியாற்றிய அனுபவத்தை கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு பேசி இருந்தார். அந்தப் பேட்டியை இங்கே பார்க்கலாம்.

அதில் அவர் பேசும் போது, 'கிட்டத்தட்ட ஒரு வருட முயற்சிக்கு பின்னர் பிசி ஸ்ரீராமிடம் உதவியாளராக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஊரிலிருந்து சென்னைக்கு வந்தால், நாம் எதிர்கொள்ளும் முதல் பயம் ஆங்கிலம் தான்.

எனக்கு அங்குள்ளவர்கள் ஆங்கிலம் பேசுவதை பார்த்த போது, இவர்களெல்லாம் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார்கள். பிறகு ஏன் ஆங்கிலத்திலேயே பேசி கொள்கிறார்கள் என்ற எண்ணம் தோன்றும்.நான் அப்போது பிசி ஸ்ரீராமின் விளம்பர கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன்.

Vadivelu: ராஜ்கிரண் - கவுண்டமணி சண்டை.. மனஸ்தாபத்தில் முளைத்த ஈக...