இந்தியா, பிப்ரவரி 16 -- பேடிஎம்-மில் பணப்பரிவர்த்தனைகளை நிறுத்த மார்ச் 15 வரை காலக்கெடுவை நீட்டித்து ரிசர்வ் வங்கி அவகாசம் அளித்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி ஜனவரி 31ஆம் தேதி, பிப்ரவரி 29க்குப் பிறகு, எந்தவொரு வாடிக்கையாளர் கணக்குகள், ப்ரீபெய்ட் கருவிகள், பணப்பைகள், ஃபாஸ்டேக்குகள் மற்றும் தேசிய பொது இயக்கம் அட்டைகளில் மேலும் வைப்புத்தொகை, கடன் பரிவர்த்தனைகளுக்கு,பேடிஎம் பேமென்ட்ஸ்ஸை பயன்படுத்தவேண்டாம் என கேட்டுக்கொண்டது.

மேலும், மாற்று ஏற்பாடுகளைச் செய்ய இன்னும் சிறிது காலம் தேவைப்படும் என பேடிஎம் பெமென்ட்ஸ் வங்கி, வாடிக்கையாளர்கள் ரிசர்வ் வங்கியிடம் கோரிக்கை வைத்தனர். இதில் பெரும்பாலானோர் வணிகர்கள்.

பேடிஎம் பேமென்ட்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, மார்ச் 15, 2024 வரை ரிசர்வ் வங்கி, பேடிஎம் பரிவர்த்தனைகளை முட...