இந்தியா, ஏப்ரல் 8 -- Pawan Kalyan: ஜனசேனா கட்சித் தலைவரும், ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் ஷங்கர், இன்று காலை அவரது பள்ளியில் ( சிங்கப்பூர்) ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்தார்.

இந்த விபத்து குறித்து பவன் கல்யாண் ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசும் போது, மகனின் கைகள் மற்றும் கால்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. புகையை முகர்ந்த காரணத்தால் மருத்துவர்களின் கண்காணிப்பில் மகன் வைக்கப்பட்டு இருக்கிறான்.

அவனுக்கு ஆபத்து இல்லையென்றாலும் கூட, பிராங்கோஸ்கோபி செய்யப்பட்டு வருகிறது. அதிகமான புகையை முகர்ந்ததால் பின்னாளில் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

விபத்தின் தீவிரம் இவ்வளவு அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை; மூத்த மகன் அகிரா நந்தர் பிறந்த ...