இந்தியா, ஏப்ரல் 7 -- Cook with Comali: விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2 வது சீசனில் பங்கேற்றதின் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்தவர் நடிகை பவித்ரா லட்சுமி. அந்த நிகழ்ச்சியில், கோமாளியாக இருக்கும் புகழுடன் இணைந்து இவர் அடித்த லூட்டிகள் அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த வெளிச்சத்தின் வாயிலாக, அவருக்கு நாய் சேகர் படத்தில் நடிகையாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து சின்ன சின்ன பட்ஜெட் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பவித்ரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய நாயை தனியார் நிறுவனம் சரியாக அணுகவில்லை (காயம் பட்டிருப்பதாக தெரிகிறது) என்று குற்றம் சாட்டி இருக்கிறார். அதில்,சம்பந்தப்பட்ட நிறுவனம் சார்பில் பேசும் நபர், நாய்க்கு டிரிம்மர் போடும் போ...