இந்தியா, பிப்ரவரி 21 -- Pasupatheswarar: உலகமெங்கும் கோயில் கொண்டு காட்சி கொடுத்து வரும் சிவபெருமான் கடவுளுக்கெல்லாம் கடவுளாக திகழ்ந்து வருவதாக புராணங்களில் கூறப்படுகின்றன. உலகம் முழுவதும் சிவபெருமானுக்கு கோயில்கள் அமைத்து வழிபாடுகள் நடந்தாலும் இந்தியாவில் சிவபெருமானுக்கு மிகப்பெரிய பக்தர்கள் கூட்டம் இருந்து வருகிறது.

தங்கள் வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து வாழக்கூடிய எத்தனையோ பக்தர்கள் இருந்துள்ளனர் தற்போது இருந்தும் வருகின்றனர். மனித இனம் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வழிபட்டதாக புராணங்களில் கூறப்படுகின்றன.

மண்ணுக்காக மன்னர்கள் போரிட்டு வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அதன் காரணமாக சிவபெருமானுக்கு பிரம்மாண்ட கோயில்களை போட்டி போட்டுக் கொண்டு கட்டி வைத்துச் சென்றுள்ளனர...