இந்தியா, பிப்ரவரி 3 -- தமிழில் உலகநாயகன் கமல்ஹாசனின் உத்தம வில்லன், அஜித்குமாரின் என்னை அறிந்தால், தளபதி விஜய்யின் தி கோட் படங்கள் நடித்திருப்பவர் நடிகை பார்வதி நாயர். தமிழ் தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கும் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் ஆகியுள்ளது.

சென்னையை சேர்ந்த தொழில்லதிபரை மணக்க இருக்கும் பார்வதி தனது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஆஷ்ரித் அசோக் என்பவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை பார்வதி நாயர். இதையடுத்து தனது நிச்சயதார்த்த புகைப்படங்கள் இன்ஸாடவில் வெளியிட்டிருக்கும் பார்வதி நாயர், ஸ்டோரியாகவும் பகிர்ந்துள்ளார்.

தனது திருமணம் குறித்து பெங்களுரு டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், " எனது வாழ்வில் அன்புக்குரியவருடன் புதிய பயணத்தை...