இந்தியா, பிப்ரவரி 10 -- சென்னையை சேர்ந்த தொழிலதிபரான ஆஷ்ரித் அசோக் என்பவருக்கும், நடிகை பார்வதி நாயருக்கு கடந்த வாரம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நடிகை பார்வதி நாயர் திருமணம் சென்னை திருவான்மியூரில் இன்று கோலாகலமாக நடைபெற்றுள்ளது. திருமதி ஆகியிருக்கும் பார்வதி நாயரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

மணமகளான பார்வதி நாயர் தங்க நிறத்திலான புடவை அணிந்து, கழுத்தில் தாமலை இலை பூ அணிந்திருந்தார். சேலைக்கு மேட்சிங்காக வளையல் அணிந்திருந்தார். அவரது கணவரான ஆஷ்ரித் அசோக், தங்க நிறத்திலான ஷெர்வானியுடன் வெள்ளை வேஷ்டி அணிந்திருந்தார்.

புதுமண தம்பதிகளுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றன. பார்வதி நாயர் திருமணத்தில் உறவினர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர்...