இந்தியா, பிப்ரவரி 19 -- Paruthi Paal: ஒவ்வொருவரும் உண்ணும் உணவிலும் குடிக்கும் பானத்திலும் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் உடம்பு என்னும் தொழிற்சாலை தொய்வு இல்லாமல் இயங்க, நாம் உண்ணும் உணவும் அது செயல்பட இன்றியமையாத காரணமாக இருக்கிறது. அப்படி நம் உடல் என்னும் தொழிற்சாலை சீராக இயங்க உதவும் ஒரு பாரம்பரியமிக்க உணவுதான், பருத்திப்பால்.

இந்த நார்ச்சத்து நிறைந்த பருத்திப் பால் தாய்மார்களுக்கு பால் சுரக்க உதவும். வெறும் வயிற்றில் பருத்திப்பால் குடித்தால், வயிற்றுப்புண் ஆறும் என்று சொல்லப்படுகிறது. இந்த பருத்திப்பால் மதுரை மாநகரில் பல்வேறு வீதிகளில் எளிதாக கிடைக்கும் ஒரு பாரம்பரிய உணவாகும். எனவே, இந்த பருத்திப்பாலை மதுரை ஸ்டைலில் தயாரிப்பது எப்படி என்பது குறித்துப்பார்ப்போம்.

பருத்தி விதையை ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு நைஸாக அரைத்துக் கொள்ளல...