இந்தியா, பிப்ரவரி 4 -- இந்த குழம்புக்கு பருப்பு குறைவான அளவு போதும். ஆனால் குழம்பு அதிகம் வரும். ஒரே மாதிரி குழம்பு போர் அடிக்கும்போது இதுபோன்ற பருப்பு குழம்பு உங்களுக்கு வித்யாசமான சுவையைத் தரும். இதைச் செய்வதும் எளிது. அதிகம் செய்யும் சாம்பார் ஒரே சுவையாக இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும். இதற்கு காய்கறிகள் எதுவும் தேவையில்லை. இதற்கு தேவையான பருப்பை ஊறவைத்து எடுத்துக்கொள்ளவேண்டும்.

பருப்பு - ஒரு கப்

சின்ன வெங்காயம் - 10

பூண்டு - 8 பல்

பச்சை மிளகாய் - 4

தக்காளி - 1

வரமல்லி - ஒரு ஸ்பூன் (தட்டியது)

சீரகம் - கால் ஸ்பூன்

மிளகு - 10

மஞ்சள் தூள் - கால் ஸ்பூன்

மிளகாய்த் தூள் - ஓரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

(இதில் சாம்பார் பொடி சேர்க்கக்கூடாது. சாம்பார் பொடி சேர்த்தால் அது சாம்பாரின் சுவையை மட்டுமே கொடுக்கும். ஆனால், அது வழக்கமான...