இந்தியா, பிப்ரவரி 10 -- நீங்கள் மகன்களின் அம்மா என்றால் உங்களுளிடம் இதுபோன்றதொரு அன்பு மற்றும் ஆதரவைத்தான் உங்கள் மகன்கள் எதிர்பார்க்கிறார்கள். அது என்னவென்று பாருங்கள். ஒவ்வொரு மகனும் அன்பு வார்த்தைகளைக் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு தனது தாயிடம் இருந்து கேட்கப்படும் அன்பு வார்த்தைகள், ஆதரவு மற்றும் ஊக்கம், உற்சாகம் என அனைத்தும் அவர்களுக்கு தன்னம்பிக்கையைக் கொடுத்து, அவர்களின் பிணைப்பை வலுப்படுத்துகிறது. எனவே அவர்களை நேர்மறையான சிந்தனைகளுடன் நேர்வழியில் அழைத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு ஒரு தாய்க்கு உள்ளது.

ஒவ்வொரு தாயும் தனது மகனுக்கு 'நான் உன்மை நம்புகிறேன்' என்ற வாக்குறுதியைக் கொடுக்கவேண்டும். இந்த நம்பிக்கை மட்டும்தான் அவர்களுக்கு தங்களின் தாய் தங்களை நம்புகிறார் என்ற பொறுப்பைக் கொடுக்கிறது. அவர்களின் தேர்வுகள் மீது அவர்களுக்கு நம்ப...