இந்தியா, பிப்ரவரி 7 -- உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு நீங்கள் கடும் தண்டனைகள் கொடுக்காமல், அவர்களுக்கு அவர்களின் எல்லைகளை நீங்கள் கற்பிக்கலாம் அது எப்படி என்று பாருங்கள். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான எல்லைகளை வகுப்பதில் உங்களுக்கு சில குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் குழந்தைகளுக்கு பொறுமையாகவும், மரியாதையுடனும் நீங்கள் கற்றுக்கொடுக்கவேண்டும். இது அவர்கள் ஆரோக்கியமான முறையில் வளர உதவும். நேர்மறையான எண்ணங்கள், தெளிவான உரையாடல்கள் மற்றும் தொடர்ச்சியான நற்பழக்கங்கள் என அவர்களுக்கு நீங்கள் சுய ஒழுக்கம் மற்றும் எல்லைகளை கற்றுக்கொள்ளவேண்டும். அதனுடன் பொறுப்பாக நடத்தல் மற்றும் உணர்வு ரீதியான அறிவுத்திறன் ஆகியவற்றையும் அவர்களுக்கு எவ்வித தண்டனைகளுமின்றி கற்றுக்கொடுக்கும் வழிகள் என்னவென்று பாருங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் எல்லைகள் மற்றும் விதிகளை ந...