இந்தியா, பிப்ரவரி 8 -- காலையில் எழுந்து குழந்தைகள் பள்ளிக்கு கிளம்புவதற்கு முன் சில நல்ல பழக்கங்களைப் பின்பற்றவேண்டும். அது என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள். இவை ஏன் காலையில் மிகவும் முக்கியம் எனவும் பாருங்கள். ஒரு நாளை நீங்கள் துவங்கும்போது ஆரோக்கியமான பழக்கங்களை அவர்கள் செய்யும்போது, அது அவர்களுக்கு அந்த நாள் முழுவதிலும் உதவுகிறது. மேலும் அந்த நாளில் கவனம் செலுத்தவும், ஆற்றலுடன் இருக்கவும், பள்ளிக்கு தயாராவதற்கும் உதவுகிறது. இந்தப் பழக்கங்கள்தான் குழந்தைகளிடம் ஒழுக்கம், நேர்மறை எண்ணங்கள் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியம் என அனைத்தையும் வளர்த்தெடுக்கின்றன. அந்த நாள் இனிய நாள் ஆவதற்கும் காரணமாகின்றன.

அதிகாலையில் துயில் எழுவது என்பது ஒரு நல்ல சிறந்த பழக்கமாகும். இது நல்ல ஒழுக்கத்தையும் தருகிறது. காலையில் அவர்கள் மனஅழுத்தமின்றி பள்ளிக்கு கிளம்பு...