இந்தியா, பிப்ரவரி 3 -- உங்கள் குழந்தைகள் 18 வயதை அடைந்தவுடன் அவர்களிடம் என்ன மாற்றங்கள் நடக்கிறது என்று பாருங்கள். அது மிகவும் முக்கியமான மாற்றங்களாகவும் இருக்கிறது. 18 வயதில், பல முக்கிய மாற்றங்கள் நடப்பதாக ஆய்வுகளும், அறிஞர்களும் கூறுகிறார்கள். அதை நாமே கூட சில நேரங்களில் அனுபவித்து இருக்கலாம். அவர்களுக்கு 10 வயதில் சட்ட ரீதியான சுதந்திரம் கிடைக்கும். உணர்வு ரீதியாக அவர்கள் முதிர்ச்சியை அடைகிறார்கள் என்று அறிவியல் கூறுகிறது. வளர் இளம் பருவத்தில் ஏற்படும் இந்த மாற்றங்கள் அனைத்தும், அவர்களின் தேர்வுகள், பொறுப்புகள் மற்றும் பரிணாமம் என அனைத்தும் உங்களிடம் மாறும்.

நீங்கள் குழந்தைப்பருவத்தில் இருந்து வளரிளம் பருவத்திற்கு மாறும்போது, உங்கள் உறவுகளிலும் சில மாற்றங்கள் ஏற்படும். இதனால் உங்களிடம் பெற்றோர் - குழந்தை உறவில் கூட குறிப்பிடத்தக்க மா...