இந்தியா, பிப்ரவரி 15 -- உங்கள் குழந்தைகள் படிப்பில் படுசுட்டியாகவேண்டுமெனில் அவர்கள் என்ன செய்யவேண்டும் என்று பாருங்கள். குழந்தைப் பருவத்தில் கல்வியில் கவனம் செலுத்து மிகவும் அவசியம். முழு கவனம், அமைதியான மனம் மற்றும் சரியான மனநிலை என படிப்பு என்பதற்கு தேவையான எண்ணற்ற விஷயங்கள் உள்ளன.சில நேரங்களில் இடையூறுகள், சுய சந்தேகம் மற்றும் மனஅழுத்தம் ஆகியவை கவனம் செலுத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும். அப்போது குழந்தைகளிடம் நீங்கள் கூறவேண்டிய விஷயங்கள் என்னவென்று பாருங்கள். இவற்றை செய்யும்போது அவர்களின் கவனம் கூராகும்.

எனது கடுமையான முயற்சி வெற்றியைக் கொண்டுவரும் என்று உங்கள் குழந்தைகள் கூறவேண்டும். படிப்பதற்கு முயற்சி என்பது மிகவும் முக்கியமாகும். ஆனால் சில நேரங்களில் அதற்கு பதில் கிடைக்க நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே இதுபோல் கூறும்போது, மாணவர்களுக்...