இந்தியா, ஜனவரி 28 -- உங்கள் குழந்தைகளை சில விஷயங்களை கற்றுக்கொள்ளவும், சென்று பார்க்கவும் அனுமதிக்கவேண்டும். அவர்களின் ஆர்வத்தையும், இலக்குகளையும் அவர்கள் நோக்கி பயணிக்க உதவவேண்டும். உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்போதும் இதுபோன்ற செயல்களை செய்யும்போது அவர்களை தடுக்கக்கூடாது. இந்த 10 விஷயங்கள் அவர்களுக்கு தன்னம்பிக்கை, மீள் திறன் மற்றும் வாழ்க்கை திறன்களை வளர்க்க உதவுபவையாகும். அவை என்னவென்று பாருங்கள்.

உங்கள் குழந்தைகளின் கிரியேட்டிவிட்டி, மூளை வளர்ச்சி மற்றும் ஒழுக்கம் என அனைத்துக்கும் இசை என்பது உரமளிக்கும் ஒன்றாகும். இது அவர்கள் தங்களை வெளிப்படுத்த உதவும். அவர்களின் திறன்களை வலுப்படுததும், அவர்களுக்கு பொறுமையைக் கற்றுக்கொடுக்கும். அவர்களின் கவனத்தை அதிகரிக்கும். அவர்கள் வாழ்நாள் முழுவதும் தனிப்பட்ட வளர்ச்சியை எட்டுவதற்கு உதவும்.

விளையா...