இந்தியா, பிப்ரவரி 17 -- பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கவேண்டிய நல்ல பழக்கங்கள் என்னவென்று பாருங்கள். இந்த நல்ல பழக்கங்கள்தான் உங்கள் குழந்தைகளை சிறந்தவர்களாக்குகிறது. உங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்களை சிறிய வயது முதலே கற்றுக்கொடுக்க துவங்கிவிட்டால், அது அவர்களின் சமூகம், கல்வி மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் உதவும். இந்தப்பழக்கங்களை நீங்கள் தொடர்ந்து பழக்குவதன் மூலம் உங்களின் குழந்தைகள் மரியாதையானவர்களாகிறார்கள். அவர்கள் சிறந்தவர்களாகவும், நல்லவர்களாகவும் இந்த சமூகத்தில் வலம் வருகிறார்கள்.

மற்றவர்களின் புறத்தோற்றம் குறித்து எவ்வித கருத்துக்களும் தெரிவிக்கக்கூடாது என்று உங்கள் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுங்கள். அவர்களின் முகம், மூக்கு, வாய் எப்படி உள்ளது என்று அவர்கள் பார்ப்பதற்கு பதில் அவர்கள் தங்களை பார்த்துக்கொள்ளவேண்டும்...