இந்தியா, ஜனவரி 31 -- சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படமாக உருவாகும் படத்துக்கு பராசக்தி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் டீஸர் கடந்த இரு நாள்களுக்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

கூடவே படத்தின் டைட்டில் தொடர்பாக சர்ச்சையும் எழுந்தது. மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் அறிமுக படமாகவும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் அனல் பறக்கும் வசனத்தில் தமிழ் சினிமாவில் கல்ட் கிளாசிக் படமாக இருந்து வரும் பராசக்தி படம் டைட்டில் உரிமையை விஜய் ஆண்டனியும் வைத்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் படத்துக்கும் அந்த டைட்டில் வைக்கப்பட்டிருப்பதால், இரு தரப்பினரும் பேசி சுமூகமான முடிவு எடுக்கப்பட்டது. இதை உறுதிபடுத்தும் விதமாக புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து சிவகார்த்...