இந்தியா, பிப்ரவரி 1 -- உங்களது உணவோடு பப்பாளி பழத்தை சேர்த்துகொள்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. குறிப்பாக மழை, குளிர்காலத்தில் இதை சேர்த்துக்கொள்வதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. அதிகமான ஊட்டச்சத்துகள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இனிப்புச் சுவையுடன் கூடிய இந்த பழம் வாயில் வைத்தவுடன் எளிதில் கரைகிறது. உடலின் வெப்பத்தை அதிகரித்து வாதம் மற்றும் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.

குளிர் காலத்தின்போது சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படுவது இயற்கையானது. இதிலிருந்து விடுபட உதவுகிறது பப்பாளி பழம். ஏனென்றால் இதில் பாப்பைன் மற்றும் சைமோபாபைன் என இரண்டு அற்புத நெதிகளில் மலசிக்கல் பிரச்னையை சீர் செய்கிறது. இவை புரதத்தை எளிதாக செரிமானம் அடைய உதவுவதன் மூலம் செரிமான பிரச்னைகள் தவிர்க்கப்படுகிறது.

ஊட்டச்சத்துக்களை பொறுத்தவரை பப்பாளியில் 200% அதிகமான வைட்டமின் சி நிறைந...