இந்தியா, ஜனவரி 29 -- தொழில்நுட்பம் முன்னேறிய பிறகு கடல் தாண்டி பயணிப்பது மிகவும் எளிதாகி விட்டது. வெளி நாடுகளுக்கு செல்லும் போது அங்கு உள்ள பலவிதமான வாழ்க்கை முறைகளும், பொருட்களும் நமக்கு அறிமுகமாகிறது. அது நம் நாட்டிலும் கிடைக்கும் அளவிற்கு பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று தான் உணவு, வெளிநாட்டில் பிரபலமான உணவுகல் நமது நாட்டிலும் வந்து விட்டன. மக்களும் அதிகமாக வெளிநாட்டு உணவுகள் மீது மோகம் கொண்டுள்ளனர் என்றே கூறலாம். அதிலும் நம் வீட்டு குழந்தைகள் குறித்து கூறவே வேண்டாம். புதியதாக வரும் உணவுகளை முதலில் ட்ரை செய்து பார்ப்பது குழந்தைகளாக தான் இருக்கின்றனர். அப்படி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பிடித்தமான ஒரு அயல்நாட்டு உணவு தான் பீட்சா, இது இல்லாத ஊரே இல்லை என்று ஆகி விட்டது. இந்த பீட்சா செய்வது கடினம் என நினைக்கிற...