இந்தியா, ஏப்ரல் 6 -- ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் கட்டப்பட்ட புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனை அடுத்து தாம்பரம்-ராமேஸ்வரம் ரயில் சேவையும் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் கடல் பகுதியில், பாக் ஜலசந்தியில் அமைந்துள்ள புதிய பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, தாம்பரத்தில் இருந்து புதிய பாம்பன் பாலம் வழியாக ராமேஸ்வரம் செல்லும் முதல் ரயிலை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த விழாவை முன்னிட்டு, மண்டபம் ரயில் நிலையத்தில் ரயில் முழுவதும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமாக விளங்கும் புதிய பாம்பன் பாலம், 2.07 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இது இந்தியாவின் பொறியியல் வலிமை மற்றும் உள்...