இந்தியா, பிப்ரவரி 20 -- சமச்சீரான உணவு தான் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். மருத்துவர்களும் உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கின்றனர். ஏனெனில் குழந்தைகளின் சீரான வளர்ச்சிக்கு அவர்களது உணவே பெரும் அளவில் உதவுகிறது. குழந்தைகளுக்கு வாரம் இரண்டுக்கு மேற்பட்ட முறை கீரை கொடுப்பதை வழக்கமாக்க வேண்டும். ஆனால் நமது வீட்டில் உள்ள குழந்தைகள் இதனை விரும்புவதில்லை. காய்கறிகள், கீரை என்றாலே தூரம் செல்லும் குழந்தைகள் தான் உள்ளனர். இந்த சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கீரையை வெறும் குழம்பாக மட்டும் வைத்தால் பிடிப்பதில்லை.

கீரை பிடிக்காத குழந்தைகளுக்கும் கீரையை வித்தியாசமாக சமைத்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் ஒரு வகை தான் வட இந்திய பிரபல உணவான பாலக் சப்பாத்தி. பாலக் கீரையில் இருந்து செய்யப்படும் இந்த சப்பாத்தி பார்ப்பதற்கு...