இந்தியா, மார்ச் 4 -- Pakistan Suicide Attack : பெஷாவர்: வடமேற்கு பாகிஸ்தானில் பன்னுவில் உள்ள பிரதான ராணுவ முகாமின் எல்லைச் சுவரில் செவ்வாய்க்கிழமை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட இரண்டு வாகனங்கள் மோதியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 16 பேர் காயமடைந்தனர் என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரியவந்துள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பெஷாவரில் இருந்து தென்மேற்கே 200 கி.மீ தொலைவில் உள்ள பன்னு கன்டோன்மென்ட்டின் சுவரில் தற்கொலைப்படை தீவிரவாதிகள் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமன நேரத்தில் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

ஹபீஸ் குல் பகதூர் அமைப்புடன் இணைந்த ஜெய்ஷ் அல் ஃபுர்சான் ஒரு அறிக்கையில், பன்னுவில் நடந்த தாக்குதலுக்கு உரிமை கோரியது. இந்த குழு தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தானின் பல பிரிவுகளில் ஒன்றாகும்.

அருகிலுள...