இந்தியா, மார்ச் 22 -- ஓடிடி தளங்களில் சமீப காலமாக காமெடி வெப் தொடர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைப்பதால், இந்த வகை காமெடி பாணியிலான தொடர்கள் பல்வேறு ஓடிடி தளங்களில் தொடர்ச்சியாக வெளிவருகின்றன. தற்போது 'செருப்புகள் ஜாக்கிரதை' என்ற காமெடி த்ரில்லர் தொடர் ஸ்ட்ரீமிங்கிற்கு தயாராகி உள்ளது. பிரபல நகைச்சுவை நடிகர் சிங்கம்புலி, இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த தொடரின் ஸ்ட்ரீமிங் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

செருப்புகள் ஜாக்கிரதை வெப் தொடர் மார்ச் 28ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது. இந்த காமெடி த்ரில்லர் தொடரின் ஸ்ட்ரீமிங் தேதியை ஜீ5 நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த செருப்புகள் ஜாக்கிரதை வெப் சீரிஸை இயக்குநர் ராஜேஷ் சூசைராஜ் இயக்கி இருக்கிறார். ...