இந்தியா, ஏப்ரல் 9 -- ஓடிடி தளங்களில் இந்த வாரம் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்கள் மற்றும் தொடர்கள் வெளியாக இருக்கின்றன.

சினிமா ஆர்வலர்கள் மற்றும் படங்களை தேர்ந்தெடுத்துப் பார்ப்பவர்களுக்கு இந்த வாரத்தில், பல்வேறு ஓடிடி தளங்களில் சூப்பரான படங்கள் காத்து இருக்கின்றன.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், ஆக்‌ஷன்-டிராமா, மர்ம-திகில், அறிவியல் புனைகதை கொண்ட டிராமா, மர்மங்கள் அடங்கிய டிராமா, வரலாற்று காவியம் என ஃபுல் பேக்காஜாக படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

ஓடிடி வெளியீட்டு தேதி: ஏப்ரல் 11

ஓடிடி தளம்: Netflix

லக்ஷ்மண் உடேகர் இயக்கிய வரலாற்று டிராமாவான இந்தப்படத்தில் விக்‌கி கௌஷல் மற்றும் ராஷ்மிகா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். மராட்டிய மன்னர் சத்ரபதி சம்பாஜி-ன் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்தப்படம் உருவாக்கப்ப...